தேனி மாவட்டம் கூடலூர் அருகே கம்பம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெருமாள் கோயில் மேட்டு சுரங்கனார் காப்புக்காடு உள்ளது. இதனருகே உள்ள பட்டா நிலத்தில் கடந்த 26-ம் தேதி மான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் கடமானை வேட்டையாடி அதனை வெட்டி, சாக்குப் பையில் கட்டி வைத்து இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்ற நபர், வனத்துறையினரை கண்டதும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்திய போது, வேட்டையாடி தப்பி சென்றவர் கூடலூர் பகுதியைச் சார்ந்த ராகவன் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ராகவன் மீது வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக ராகவன் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று (30.05.2025) கம்பத்தில் பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து ராகவனை வனத்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version