கோவையை சேர்ந்தவர் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். மதபோதகர் ஜான் ஜெபராஜ் சமீபத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமினில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் ஜான் ஜெபராஜ் குறித்து வழக்கறிஞர் சாண்டி வில்லியம்சின், வழக்கறிஞர் நண்பர் ஒருவர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

இதனால் கோபம் அடைந்த ஜான் ஜெபராஜ் ஆதரவாளர் ஜோஸ்வா எடிசன் என்பவர் சமூக வலைதளங்கள் மற்றும் யூ-டியூப் சேனல்களில் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் மற்றும் அவரது வழக்கறிஞர் நண்பர் குறித்து அவதூறு பரப்பினார். இதை தொடர்ந்து வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ், நண்பர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஜோஸ்வா எடிசன் மீது புகார் அளித்தார்.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி நள்ளிரவு சுமார் 1.15 மணிக்கு ஜோஸ்வா எடிசன் செல்போன் மூலம் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்சின் நண்பர் ரியல் எஸ்டேட் அதிபர் பிரபு டேனியலுக்கு அழைத்துள்ளார். அப்போது ஜோஷ்வா எடிசன் ஆபாச வார்த்தைகள் பேசி வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த விபரத்தை பிரபு டேனியல் தனது நண்பர் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்சிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜான் ஜெபராஜின் ஆதரவாளர், ஜோஷ்வா எடிசனை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version