சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(45). இவர் கடந்த 13 ஆண்டுகளாக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் மனைவி வாசுகி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று(25.05.025) காலை மதுரை மாநகர் கோமதிபுரம் மல்லிகை மேற்குதெருவில் மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பழுது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் அதனை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருநதுள்ளார்.
அப்போது திடிரென டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.
இதில் தலைப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மதுரையில் கடந்த 3 நாட்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியின் போது உயிரிழந்து வரும் நிலையில்,
தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், மின்வாரிய ஊழியர்களுக்கான உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.
