வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக – பாஜக கடந்த ஏப்ரல் மாதமே கூட்டணியை அறிவித்துவிட்டன. இதனால் அதிமுகவில் பல முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதிமுகவில் நிலவிவரும் குழப்பங்களுக்கு மத்தியில் சமீபத்தில் செங்கோட்டையன், விஜய்யின் தவெகவில் இணைந்தார். கட்சியில் இணைந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில் செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது,
இருப்பினும் தேர்தல் வியூகங்களை வகுத்தும் வரும் அரசியல் கட்சிகள், ஒவ்வொரு கட்சிகளில் இருந்து மற்ற கட்சிகளில் இணைந்தும் வருகின்றனர். இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்கலுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர், மீனவர் பிரிவு இணைச் செயலாளர் சீனி காதர்மொய்தீன் நீக்கம். ராமநாதபுரம் மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் பக்கர் அதிமுகவில் இருந்து நீக்கம். மண்டபம் பேரூராட்சி ஐடி பிரிவு இணைச் செயலாளார் ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
