சர்வதேச உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதியை முன்னிட்டு, சென்னை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு (Bars) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான விதிகள் 2003 மற்றும் 1981-ன் கீழ் சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து சில்லறை விற்பனை கடைகள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள் மற்றும் ஹோட்டல்களில் இயங்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று எவரேனும் மது விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது மதுபானக் கூடங்களைத் திறந்து வைத்திருந்தாலோ, அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கத் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள மதுப்பிரியர்கள் மற்றும் உரிமையாளர்கள் இந்த விதியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version