மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து சீரானதால், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் இரண்டு நாட்களாக தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து சீராகி உள்ளதால் இன்று முதல் சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதையடுத்து ஆர்ப்பரித்து விழும் அருவி நீரில் குளிப்பதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு படையெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version