வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். கணவன் வீட்டாரை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்

திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி என்பவரை ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் செய்து கொடுத்தனர்.

திருமணத்தின் போது 120நகை, 25 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிவற்றை கொடுத்த நிலையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனை வகையில் 50 லட்சம் பணம் வருவதை அறிந்து அதனை கேட்டு கொடுமை படுத்திய நிலையில் 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டிற்கு வந்துள்ளார். ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி 2 நாட்களுக்கு முன்பு தாயார் வெளியே சென்ற போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை மீட்ட நல்லூர் போலீசார் உடற்கூறாய்வு சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள், பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரேதத்தை பெற்றுக் கொள்வோம் என திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனாகத்தில் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நல்லூர் போலீசார் இன்று ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் மூவரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்து வருகின்றனர். தொடர்ந்து இது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தப்படும். போலீசார் கைது செய்து விட்டோம் என தெரிவித்த நிலையில் 3 பேரையும் காட்ட வேண்டும் என தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். என் மகளுக்கு நீதி வேண்டும். தமிழகத்தில் இது போன்று இனி நடக்க கூடாது. மூன்று பேரையும் கைது செய்து என் முன்பு காட்டினால் தான் ப்ரீத்தி உடலை பெறுவோம் என ப்ரீத்தியின் தாய் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version