தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க தெய்வங்களின் ஆசிவேண்டு, தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் நாளை மண்சோறு உண்ணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று முதலமைச்சராக மு க ஸ்டாலின் மீண்டும் பதவி ஏற்க மக்கள் தீர்ப்புடன் தெய்வங்களின் ஆசி வேண்டி நாளை 29.04.2026 புதன்கிழமை காலை 11 to 11.30 மணியளவில்  கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அங்காளம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அங்காளம்மன்  கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்காக தெய்வீக பக்தர்கள் பேரவையினர் கடந்த மார்ச் 13 -ம் தேதி முதல்  48 நாட்கள் விரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சியையொட்டி, சிதம்பரம் அங்காளம்மன்கோவிலில் சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version