பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி வழக்குத் தாக்கல் செய்திருக் கிறது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்ற காரணத்துக்காக நாடு முழுவதும் 474 கட்சிகளின் பதிவை கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து மனித நேய மக்கள் கட்சியை நீக்கியதை எதிர்த்து, அக் கட்சியின் சார்பில், அதன் பொதுச்செயலாளர் அப்துல் சமது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version