மக்கள் ஆதரவு உள்ளதால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமோக வெற்றி பெறும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பாமல் இருப்பதை கண்காணிப்பதற்காக 2023 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும், அது தற்போது நீதித்துறையின் மறு ஆய்வில் இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது கைபேசிகளின் உபயோகம் மிகவும் அதிகரித்து விட்டதால் அனைவரும் தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதாகவும் ஆனால் அதில் உண்மை தன்மையும், நாட்டின் இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க:   அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களால் ராமதாஸ் உடனிருப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்: பாமக எம்எல்ஏ அருள் பகீர் குற்றச்சாட்டு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கூறியுள்ள கருத்துகள், மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version