பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தாருக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

ரத யாத்திரையின் போது, சாரதா பாலி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஒடிசா மாநில முதல‍மைச்சர் மோகன் சரண் மாஜி இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 8 மணி நேரம் முன்பே வெளியாகும் ரயில் பயணிகள் அட்டவணை.. அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு!

மேலும், உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தாருக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version