சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் இல்லம் இன்று திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதிலிருந்து தவெக பல இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் அவரது வீட்டின் முன்பு பெருமளவில் திரண்டனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 111 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருவதால், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

தொண்டர்களின் ஆரவாரத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “தளபதி… தளபதி…” என விண்ணை பிளக்கும் தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், புன்னகையோடு  நன்றி தெரிவித்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version