சென்னையில், தூய்மை பணியாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் வழங்கியதைக் கண்டித்து உழைப்பவா் உரிமை இயக்கம் சாா்பில் அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிப்பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 10-வது நாளாக தூய்மை பணியாளர்கள் தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், அது பலனளிக்கவில்லை.

இந்த நிலையில், போராட்டக் குழுவுடன், 7-ம் கட்டமாக அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் மீண்டும் தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வார்கள் எனக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version