வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால், அதே பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இதன் காரணமாக, இன்று (மே 27) முதல் வரும் மே 30-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிற மாநிலங்களுக்கு எச்சரிக்கை
இன்றைய தினம் கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, கோவா, மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.