சிவகங்கையில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக அஜித்குமார் என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். கோயிலுக்கு வருகை தந்த நிதிகா என்பவர் தனது நகை திருடப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்க, அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை காவல்நிலையம் அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதேப் போல், அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டதோடு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிபிஐக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
சிபிஐ தரப்பில் விசாரணை அதிகாரியாக டெல்லியை சேர்ந்த மோகித் குமார் என்பவர் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் தலைமையிலான போலீசார் இந்த வழக்கு விசாரணையை கடந்த 14-ம் தேதி தொடங்கினர். தனிப்படை காவலர்களிடம் விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். 5 பேரையும் 13-ம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அத்தோடு, இந்த வழக்கு விசாரணை அறிக்கையை
வரும் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கில் புகார் தெரிவித்த நிகிதாவின் கார் கோயில் பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லவில்லை என சிபிஐ விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொகொயிலில் இருந்து கார் எங்குமே செல்லாத நிலையில், அஜித்குமார் மீது நிகிதா பொய் புகார் அளித்து இருக்கலாம் என சிபிஐ சந்தேகம் எழுப்பியுள்ளது.