சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரையாண்டு விடுப்புக்கு பின்னர் ஜன.5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது.
தேர்வு நேரம் நெருங்குவதால் மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பள்ளிக்கு திரும்ப வேண்டும். தொடர்ந்து, அவர்கள் தங்களது வழக்கமான கற்றல், கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். பள்ளி நேரம் முடிந்ததும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யலாம். ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் பள்ளி கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் 36வது நாளாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் தலையில் அரசு பேரிடியை இறக்கியுள்ளது. அவர்களுக்கு No work No pay அடிப்படையில் ஜனவரி மாத சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போராட்டத்தை கைவிடவில்லை எனில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது அரசு. அதன்படி சம்பளம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
