தமிழ்நாட்டில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் கூட, வித்தியாச, வித்தியாசமான பாணியில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.

அந்த வகையில், கோவை, கணபதி அருகே உள்ள அத்திபாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் பம்ப் கம்பெனியில் யாசகம் கேட்பது போல் வந்த 7 வடமாநில பெண்கள் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு உள்ள கம்பெனியில் இருந்த காப்பர் ஒயர் மற்றும் பித்தளை உலோகங்களை திருடி சென்று உள்ளனர்.

பொருட்கள் குறைவதை பார்த்த நிறுவனத்தினர், அங்கிருந்த சிசிடிவியை ஆராய்ந்த போது, வடமாநில பெண்களின் கைவரிசை சிக்கியது. அதில் ஒரு பெண்மணி நிறுவனத்தில் உள்ள பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த பெனாயில் பாட்டிலையும் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், திருட்டில் ஈடுபட்ட வடமாநில பெண்களை தேடி வருகின்றனர். அத்தோடு சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் சுற்றித்திரிந்தால் காவல்துறையில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version