மதுரை பிரபல ரவுடி வரிசூர் செல்வம் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்
*மதுரையில் கடந்த 2012ல் வரிசூர் செல்வம் உட்பட 4 பேர்மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள சுகன்யா லாட்ஜில் குற்றவாளிகளான வரிசூர் செல்வம், கேரளாவை சேர்ந்த சினோஜ், அஜிஸ், வர்கீஸ் ஆகியோர் பதுங்கி இருந்தனர்.
இதனை அறிந்த சிலைமான் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் 12.03.2012ல் அவர்களை கைது செய்வதற்காக திண்டுக்கல் வந்துள்ளார்.
அப்போது, குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காவல்துறையால் கேரளாவை சேர்ந்த சினோஜ் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2ல் நடைபெற்று வந்தது இதில் தொடர்ச்சியாக வரிசூர் செல்வம் ஆஜராகாமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து திண்டுக்கல் நீதிமன்றம் வரிச்சூர் செல்வத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, வத்தலகுண்டு பகுதியில் வைத்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் வரிச்சூர் செல்வத்தை இன்று 19.09.25 கைது செய்தனர்.
பின்னர் வரிசூர் செல்வத்தை திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2ல் போலீசார் ஆஜர் படுத்தினர்.