புதுச்சேரியில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் உள்ள மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் இன்று உலக செவிலியர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கை விளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்படும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங் கேள் அவர்களின் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற செவிலியர் தின விழாவில், சுகாதாரத் துறை இயக்குனர் செவ்வேல், மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ்,,உதவி செவிலியர் கண்காணிப்பாளர் மதி பக்கிரிசாமி,  தலைமையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன் மக்கள் குறை தீர்ப்பு அதிகாரி ரவி முன்னிலையிலும்   செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கில் உருவப்படத்திற்கு செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

இதில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை செவிலியர் அதிகாரிகள், முதுநிலை செவிலியர் அதிகாரிகள், பங்கேற்றனர். இறுதியில் அனைவரும் வாழ்த்துகளையும், இனிப்புக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version