அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi போன்ற வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பைக், டாக்சி சேவைகளை முற்றிலுமாக தடை செய்ய கோரி, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவையின் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில், அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi போன்ற நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறி பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது, அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து இயங்கும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது என்றும் அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

மேலும், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை வாடகை பயன்பாட்டிற்காக மாற்றி இயக்குவதையும், Red Taxi நிறுவனம் விதிகளை மீறி வாகன மேல் கூரையில் சிவப்பு வண்ணம் பூசி விளம்பர சேவையுடன் இயங்குவதைச் சட்டவிரோதமானதாகக் கூறி அதற்கும் தடை கோரி உள்ளனர். ONROADZ, ZOOM CAR, BLA BLA CAR போன்ற ஆப் நிறுவனங்களின் சட்ட மீறல் செயல்பாடுகளையும் கூறிய ஓட்டுநர்கள்.

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பைக் டாக்சிகள் தடை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளனர். சட்டத்தை பின்பற்றும் நாங்கள் இன்று வாழ்க்கை வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் என்றும், இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் சட்ட மீறலுக்கு உடனடி முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version