தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸுக்கு மீண்டும் பவர் கிடைக்கும் என்று விஜய்யின் தந்தை கூறியது பொதுவான கருத்து என்றும், கூட்டணி குறித்து விஜய் மட்டுமே அறிவிப்பார் என்றும் அக்கட்சியின் இணை செயலாளர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து மண்டல வாரியாக பிரச்சாரகுழு செயல் வீரர்கள் கூட்டங்களை நடத்துகிறோம். ஒரு சில நாட்களில் கட்சி தலைவர் பரப்புரை நிகழ்வு குறித்து அறிவிப்போம். எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது பொதுவான கருத்தை தான் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார். கூட்டணி குறித்து தலைவர் அறிவிப்பார் என்றார்.
திமுக வை எதிர்த்து பேசாதாவர்கள். எம்.ஜி.ஆர் உழைத்து ஆரம்பித்த கட்சி. ஜெயலலிதா வும் உழைத்தார். ஆனால் அந்தக் கட்சி எப்படி இருக்கிறது. அவர்களின் நிலை எப்படி மாறிவிட்டது. அதற்காக தான் NDA வில் இருக்கிறார்கள்.
கரூர் சம்பவத்தை அரசியலுக்காக மாற்றி மாற்றி பேசுவார்கள். ஆனால் மக்களுக்கு தெரியும். செங்கோட்டையன் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. தமிழிசை எங்கள் மீது விமர்சனம் வைக்கிறார். ஆனால் பல தொகுதிகளில் மாறி மாறி போட்டியிடுகிறார். தூத்துக்குடி, விருகம்பாக்கம், வேளச்சேரி என மாறி மாறி நிற்கிறார். மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள். எங்களை விமர்சிக்க வேண்டாம். ராமதாஸ் குறித்து யூகத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை என செய்தி போட வேண்டாம். அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
