புயல் காரணமாக, சென்னையில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என 2 நாள்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இன்று (29-11-2025) நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (30-11-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version