இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், இரண்டு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப் போல, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாஐ மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெப்பநிலை படிப்படியாக குறையக் கூடும் எனவும், அரபிக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
