பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் சில தனிநபர்களின் பெயருக்கு மாற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட அதிமுக ஐ.டி. பிரிவு இணை செயலாளர் இந்திராணிக்கு எதிராகப் புகார்கள் எழுந்தன.

குறிப்பிட்ட அந்தச் சமூக வலைதளப் பதிவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அவதூறு விளைவிக்கும் நோக்கில் இருப்பதாகக் கூறி அமைச்சரின் உதவியாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்திராணி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தன் மீது தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி இந்திராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் அவர்கள், மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version