குறவர் சமூக மக்கள் கொடுத்துள்ள மனுவை பரிசீலனை செய்ய ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மனு பரிசீலனை செய்யும் வரை அப்பகுதி மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது – நீதிபதி உத்தரவு

வேந்தோணி பகுதியை சேர்ந்த
சோலையப்பன் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனு.

நாங்கள் குறவர் சமூகத்தை சார்ந்தவர்கள் எங்கள் சமூகத்தின் பலர் நாடோடிகளாக இருந்து வருகின்றனர் இந்நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த குறவர் இனத்தை சார்ந்தவர்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி எங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வேந்தோணி
பகுதியில் குடியிருக்க பட்டா வழங்கப்பட்டது வழங்கப்பட்ட இடத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றோம் இந்நிலையில் கடந்த ஜூன் 2024 ஆம் ஆண்டு முதல் எங்களை இந்த பகுதியில் இருந்து காலி செய்ய மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது எங்களை காலி செய்து விட்டு வேறு சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாடோடிகளாக இருந்த குறவர் சமூக மக்கள் அமைதியான முறையில் ஒரு இடத்தில் குடியிருந்து வரும் நிலையில் எங்களை காலி செய்ய சொல்வது சட்டவிரோதம்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு மனுக்கள் வழங்கியும் எந்த நடவடிக்கை இல்லை

எனவே எங்கள் குடியிருப்புகளை காலி செய்ய முயற்சிக்கும் அதிகாரிகள் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் மேலும் எங்கள் மனுக்களை பரிசீலனை செய்து எங்களுக்கு ஈ பட்டா வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி சௌந்தர் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணை செய்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் .

குறவர் சமூக மக்கள் அளித்துள்ள மனுவின் அடிப்படையில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை குறவர் மக்களை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version