நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின், உடலை வாங்க அவரது உறவினர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐடி ஊழியரான கவின் என்பவர் நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கவினை கொலை செய்ததாக சுர்ஜித் காவல்நிலையத்தில் சரணடைந்தார். கவின் காதலித்த பெண்ணின் சகோதரனான அவர், கவின் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்க அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவின்ர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டவரின் பெற்றோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறவாக உள்ள அவரது தாயை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கவினின் உடலை பெற்றுக் கொள்ள அவரது உறவினர்கள் 5 நாட்களுக்கு பிறகு சம்மதம் தெரிவித்துள்ளனர்.