நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே, இக்கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தொகுதி மறுவரை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட்டம் போடுவது கேளிகூத்தா இருக்கு என்று விமர்சித்துள்ளார். பெரம்பலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களே இல்லாத கட்சிகள் இதுபோன்ற கூட்டங்களை நடத்துவது இயல்புதான் என்றாலும், ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) என்றால் என்னவென்றுகூடத் தெரியாதவர்கள் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டுவது கேலிக்கூத்தாக இருக்கிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்தார்.
