சிவகங்கை அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிவாரணமும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘ சிவகங்கை அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version