தமிழக அரசு மாநில அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு அறிக்கையின்படி அதிகபட்சமாக ரூ.3000 வரை போனஸ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிகப் பெரிய பண்டிகையான பொங்கல் தினம் கொண்டாடாப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசாக மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000 வரை போனஸ் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு பொங்கல் சிறப்பு போனஸாக ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது குரூப் சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தலா 3,000 மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.1,000 பொங்கல் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழக அரசு ஊழியர்கள் 9.90 லட்சம் பேர் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பில் பொதுமக்களுக்கான பொங்கல் ரொக்க பரிசு அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
