தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையின் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் வசம் காவல் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்ள நிலையில், மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள் பின்வருமாறு:
முதலமைச்சர் ஜோசப் விஜய்:
-
காவல் துறை
-
உள்துறை
-
பொது நிர்வாகம்
-
மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலன்
-
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
- நகராட்சி நிர்வாகம்
- குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 16 துறைகள் முதலமைச்சர் விஜய் வசம் உள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகள்:
கே.ஏ.செங்கோட்டையன் – நிதித்துறை
ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை.
டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
சி.டி.ஆர். நிர்மல் குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை, ஊழல் தடுப்பு, நீதி, சிறைத்துறை
ராஜ்மோகன் – பள்ளிக்கல்வித் துறை, தொல்லியல்துறை, செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை
‘புஸ்ஸி’ என். ஆனந்த் – ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டம், கிராமப்புறக் கடன் சுமை நீக்கம், பாசனம் மற்றும் சிறுபாசனத் திட்டங்கள்
பி. வெங்கட் ரமணன் – உணவுத்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாடு
கீர்த்தனா – தொழிற்துறை, முதலீடு ஊக்குவிப்பு
டி.கே. பிரபு – கனிம வளத்துறை, சுரங்கத் துறை
