தமிழக சட்டசபைக்கு சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இந்த கூட்டணியில் அன்புமணி தரப்பு, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளன. இந்தநிலையில், கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சில கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாளை பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். அதற்குள் கூட்டணி இறுதி செய்யவேண்டும் என்று தமிழகம் வந்துள்ள தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஸ் கோயல் பல கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.

https://x.com/ANI/status/2014185110984167516

அந்தவகையில் தற்போது, சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்திப்பு நடைபெற்றுள்ளது. NDA கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஆலோசிப்பதாகவும், பிரதமர் மோடி தலைமையில் நாளை NDA தலைவர்கள் அறிமுக கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version