மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஊழியர்களுக்கு வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தமிழக மின்வாரியம் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டு வந்தாலும், மேம்படுத்த வேண்டிய பல அம்சங்கள் உள்ளதாகவும், அதன்படி, நேரக்கட்டுப்பாட்டுடன் சேவைகள் வழங்கப்பட வேண்டும், தாமதங்கள் ஏற்பட்டால் நுகர்வோருக்கு காரணம் தெரிவிக்க வேண்டும், புகார்களை புறக்கணிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகார், மனுவுக்கு காலக்கெடுவுடன் தீர்வு வழங்க வேண்டும் என்றும், பெயர் மாற்றம், மின் இணைப்பு, சூரிய மின் உற்பத்தி போன்றவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும்,
திட்டங்கள் தொடர்பான கோப்புகள் விரைவாக நகர்த்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், செயல்படாத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, ஒப்பந்ததார்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு இருப்பதாகவும்,
கள அளவில் போதிய உதிரி பாகங்கள் இருப்பில் வைப்பதை உயரதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

புயல் காலங்களில் பணிபுரிந்தவர்களின் அனுபவங்களை, தற்போதைய காலத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள மின்கம்பிகளை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். இவ்வாறு அனைத்து பிரிவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version