astrology
நவ கிரகங்களில் நிழல் கிரகங்கள் ராகுவும் கேதுவும் 18 மாதங்கள் ஒரு ராசியில் தங்கியிருந்து பலனை தருவார்கள். ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகி உள்ள இந்த நேரத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்? பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வருமானத்தையும் தரப்போகின்றனர். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திடீர் மாற்றம் ஏற்படும். 5ஆம் வீட்டில் கேது பயணம் செய்வதால் குலதெய்வ பிரார்த்தனை செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
ரிஷபம்: சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசனும், சம்பள உயர்வும் கிடைக்கும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினை தீரும். ராகு கேது பெயர்ச்சி யோகத்தைக் கொடுக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதால் கடன் சுமை குறையும்.
மிதுனம்: ராகு பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டிலும் கேது முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டிலும் பயணம் செய்வது யோகமான அமைப்பு. குடும்பத்தில் இது நாள் வரை தடைபட்ட சுப காரியங்கள் . சில மாதங்களில் ராகு மீது குரு பார்வை கிடைக்கும். உங்க ராசிக்கும் குரு பார்வை கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். ராகு கேது விடிவையும் விமோசனத்தையும் கொடுப்பார்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ராகு 8ஆம் வீட்டிலும் கேது இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்வதால் யோகமும் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது. ராகு பகவான் விபரீத ராஜயோகத்தை தரப்போகின்றனர். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகள் தேடி வரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். படிப்பு, வேலைக்காக பிள்ளைகள் பிரிந்து போகலாம். குடும்ப ஸ்தானத்தில் கேது பயணம் செய்வதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். பணம் விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்க ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பயணம் செய்வதால் வியாபாரம், தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். சண்டை சச்சரவு என்று இருந்த கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஓன்று சேரலாம். கேதுவின் பயணத்தால் கஷ்டங்களில் இருந்து விடிவு விமோசனம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகள் படிப்புக்காக கடன் வாங்குவீர்கள்.
கன்னி: ஆறாம் வீட்டில் ராகு பயணம் செய்வதால் தீராத நோய் தீரும். வருமானம் அதிகரித்து கடன் பிரச்சினை நீங்கும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது பயணம் செய்வதால் புதிய முயற்சிகள் கை கூடும். வருமானம் அதிகரித்து சேமிப்புகள் உயரும். ராகு கேதுவினால் உங்களின் செல்வமும் செல்வாக்கும் உயரப்போகிறது.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு 5ஆம் இடத்திலும் கேது லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும் பயணம் செய்வதால் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். லாப வீட்டில் கேது பயணம் செய்வதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். சண்டை சச்சரவாக இருந்த குடும்பத்தில் அமைதி ஏற்படும். வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். பூர்வ புண்ணிய ராகுவினால் குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள்.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. ராகு கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திலும், கேது 10இடத்திலும் பயணம் செய்வதால் பூமி வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுப்பார். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு இந்த ஸ்தானத்தில் கேது பயணம் செய்வதால் தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் யோகத்தை கொடுக்கும். வசதி வாய்ப்புகள் கூடும் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு கிடைக்கும்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. மூன்றாம் இடத்தில் பயணம் செய்யும் ராகு உங்களுக்கு யோகத்தை வழங்க போகிறார். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் கேது பயணம் செய்வதால் இதுவரை தடைபட்டு நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் தேடி வரும்.

 

மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகின்றன. ராகு 2ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய தேவைகேற்ப தனவரவு, வரும். நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகமும் கைகூடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். எட்டாம் வீட்டில் பயணம் செய்யும் கேதுவினால் வருமானம் அபரிமிதமாக வரும். தொட்டது துலங்கும். போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும். நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பணம் விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்யும் ராகுவிற்கு ஏழாம் வீட்டில் உள்ள கேதுவின் பார்வையும் கிடைக்கிறது. நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும் இதுநாள் வரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது பயணம் செய்வதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம் கவனம் தேவை.
மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்” என்பதன் அடிப்படையில் இப்பொழுது 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்திற்கு ராகுவும் ஆறாம் வீடான ருண ரோக ஸ்தானத்திற்கு கேது வருவது நல்லது தான். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேதுவின் சஞ்சாரத்தினால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். திருமணம் வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபகாரியங்கள் மளமளவென நடைபெறும். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாறும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரப்போகிறது.
பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டவை. TN Talks இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
Share.
Leave A Reply

Exit mobile version