தந்தை – மகன் மோதலுக்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில் சேலத்தில் இன்று (டிச.29) பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற செயற்குழு  மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.  தந்தை – மகன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும் செயல் தலைவராக காந்திமதி, கௌரவ தலைவராக ஜி.கே.மணி, பொதுச்செயலாளராக முரளி சங்கர், பொருளாளராக சையத் மனுசூர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராமதாஸுக்கு மட்டுமே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version