Close Menu
    What's Hot

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய சோனியா காந்தி?. தொகுதி பஞ்சாயத்து ஓவர்!.

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூட்டணியை இறுதி செய்தார் ராமதாஸ்!. ஆனால்…. தொண்டர்களுக்கு மடல்!.
    தமிழ்நாடு

    கூட்டணியை இறுதி செய்தார் ராமதாஸ்!. ஆனால்…. தொண்டர்களுக்கு மடல்!.

    Editor web3By Editor web3February 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ramadoss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ராமதாஸின் நிலைப்பாடு குறித்த சஸ்பென்ஸை உடைக்கும் வகையில்,  தனது தொண்டர்களுக்கு முக்கிய மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?

    எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.

    நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.

    இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி,நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.

    நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.

    உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அந்த வாகனம் யாராக இருக்கும் என்று ஆதரவாளர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?
    Next Article டுவிஸ்ட்!. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெக விருப்பம்!. கிரிஷ் சோடங்கர் பதில்!
    Editor web3
    • Website

    Related Posts

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    February 25, 2026

    முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய சோனியா காந்தி?. தொகுதி பஞ்சாயத்து ஓவர்!.

    February 25, 2026

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!

    February 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய சோனியா காந்தி?. தொகுதி பஞ்சாயத்து ஓவர்!.

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!

    டுவிஸ்ட்!. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெக விருப்பம்!. கிரிஷ் சோடங்கர் பதில்!

    கூட்டணியை இறுதி செய்தார் ராமதாஸ்!. ஆனால்…. தொண்டர்களுக்கு மடல்!.

    Trending Posts

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    February 25, 2026

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    February 25, 2026

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    February 25, 2026

    தள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?

    February 25, 2026

    காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000!. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!.

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.