Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!
    தமிழ்நாடு

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!

    Editor web3By Editor web3February 25, 2026Updated:February 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    senthil balaj annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புழல் சிறைக்கு சென்று வந்த பிறகும் செந்தில் பாலாஜியிடம் எந்தவித மாற்றமும் இல்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் நடைபெற்ற பாஜக சார்பில் தெருமுனை பிரச்சார நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  தமிழக அரசின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    தமிழகம் 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக முதலமைச்சர் பெருமையாகக் கூறி வருகிறார். ஆனால், எதார்த்த நிலவரம் வேறாக உள்ளது என்று அண்ணாமலை சாடினார். “தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத் துறையில் வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. விவசாயத்திற்குத் தேவையான வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, புதிய அணைகளும் கட்டப்படவில்லை. அமராவதி ஆற்றின் உபரி நீரை முறையாகக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்திருந்தால் விவசாயம் செழித்திருக்கும். அடிப்படைப் பணிகளைச் செய்யாமல் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதாகக் கூறுவது வெறும் கண்துடைப்பு” என்று அவர் விமர்சித்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியை இலக்கு வைத்துப் பேசிய அண்ணாமலை, கரூரில் தொடங்கி கோவை, சென்னை வரை ‘கரூர் குரூப்’ என்ற பெயரில் ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகப் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார். “300 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டு வந்த பிறகும், அதே பழைய வேலைகளையே அவர் செய்து வருகிறார். டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்குப் பணம் வசூலிக்க 20 பேர் கொண்ட கும்பலை வைத்துள்ளனர். இவர்களுடைய இந்தச் செயலால் கரூரில் உள்ள நேர்மையான மக்களுக்குத் தேவையற்ற தலைகுனிவு ஏற்பட்டுள்ளது” என அவர் பேசினார்.

    செந்தில் பாலாஜி தற்போது கரூரை விட்டுவிட்டு கோவையில் போட்டியிடத் திட்டமிடுவதையும் அண்ணாமலை கிண்டல் செய்தார். “கரூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு இப்போது கோவைக்கு மாற நினைக்கிறார். ஒரு தனி நபரால் ஒட்டுமொத்த மாவட்டத்தின் பெயரும் கெட்டுப்போயுள்ளது. கரூரின் பெருமையைச் சீர்குலைக்கும் ‘கரூர் குரூப்’ வசூல் கலாச்சாரத்திற்கு இந்தத் தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடுவிஸ்ட்!. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெக விருப்பம்!. கிரிஷ் சோடங்கர் பதில்!
    Next Article முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய சோனியா காந்தி?. தொகுதி பஞ்சாயத்து ஓவர்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.