Close Menu
    What's Hot

    கடுமையாக தாக்குவோம்!- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    “மக்கள் நலனுக்காக ஒன்றுபடுவோம்”: முதல்வர் விஜய் உறுதி- டி.ராஜா

    21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை – அரசு அதிரடி உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!
    இந்தியா

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3February 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 month baby murder mother
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தெலங்கானா மாநிலத்தில் பெற்ற தாயே தனது இரண்டு மாத குழந்தையை எரியும் அடுப்பில் வீசிக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தெலங்கானா மாநிலம் விக்காராபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது குடும்பத் தகராறு காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

    நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அடுப்பு எரிந்து கொண்டிருந்தபோது, தனது 2 மாதக் குழந்தையைத் தாய் அதில் தூக்கி வீசியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், குழந்தை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்காராபாத் போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையைக் கொன்ற தாயைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதாகவும், இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் குடும்பத்தில் ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதேபோல், பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression) காரணமாக இந்தச் செயலில் ஈடுபட்டாரா? என்பதையும் கண்டறிய மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!
    Next Article தேர்தல் பரபரப்பு!. தமிழகம் வந்தார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    கடுமையாக தாக்குவோம்!- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    June 11, 2026

    “மக்கள் நலனுக்காக ஒன்றுபடுவோம்”: முதல்வர் விஜய் உறுதி- டி.ராஜா

    June 11, 2026

    21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை – அரசு அதிரடி உத்தரவு

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடுமையாக தாக்குவோம்!- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    “மக்கள் நலனுக்காக ஒன்றுபடுவோம்”: முதல்வர் விஜய் உறுதி- டி.ராஜா

    21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை – அரசு அதிரடி உத்தரவு

    பாரதிராஜா உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்: முதல் போட்டியில் மெக்சிகோ- தெ.ஆப்., மோதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.