நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காம்ளக்ஸ் பொதுக் கழிவறையில் ரகசியமாக செல்போனை வைத்து பெண்களை வீடியோ எடுத்த பிரபல டீ கடையின் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் பகுதியில் தனியார் காம்ளக்ஸ் ஒன்றில் லட்சுமி காபி பார் செயல்படுகிறது. ஆரம்பத்தில் 5 ரூபாய்க்கு டீ கொடுத்து வந்ததால் கூட்டம் அலைமோதும். இதனால், 5 ரூபாய் டீ கடை என பிரபலமாக இந்த பகுதியில் இருந்தது.
இங்கு ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் 27 என்பவர் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
இந்த கம்பளக்சில் பொதுக்கழிவறை உள்ளது. இதை அருகில் உள்ள கடைகளில் வேலை செய்யும் பெண்களும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கழிவறைக்கு சென்ற நாகராஜ் தனது செல்போனில் வீடியோவை ஆன் செய்து வைத்துவிட்டு வந்துவிட்டார். அதன்பிறகு கழிவறை சென்ற ஒரு பெண் மொபைல் போனில் வீடியோ பதிவு ஆவவதை தெரிந்ததும் கத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்ததுடன், செல்போனை கைப்பற்றினர்.
இதுகுறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தபோது, கழிவறையில் இருந்தது டீ மாஸ்டர் நாகராஜின் செல்போன் என்பதும், அவர் கழிவறைக்கு சென்ற பெண்களை வீடியோ எடுத்ததும் தெரிந்தது. செல்போனை கைப்பற்றிய போலீசார் நாகராஜ் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
