Close Menu
    What's Hot

    காமன்வெல்த் 2026| டெகத்லானில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்!. சாதனை படைத்தார் தேஜஸ்வின் சங்கர்!

    காலையிலேயே குட்நியூஸ்!. சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!

    காமன்வெல்த் குத்துச்சண்டை!. இறுதிப்போட்டிக்கு முன்னேறி 10 பதக்கங்களை உறுதி செய்தது இந்தியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»‘பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள்’ – சௌமியா அன்புமணி ஆவேசம்!
    அரசியல்

    ‘பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள்’ – சௌமியா அன்புமணி ஆவேசம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sowmiya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை மேற்கொள்வது தொடர்பாக, பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.22) சென்னையில் நடைபெற்றது.

    மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் என்பதால், இக்கூட்டத்திற்கு வருகை தந்த பெண்களுக்கு மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மலர்கள் வழங்கி, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சௌமியா அன்புமணி கடந்த மக்களவை தேர்தலில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் முதல்முறையாக தேர்தல் அரசியலில் களம் கண்டிருந்தார். இந்நிலையில் முதல் முறையாக பாமக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை தன்னுடைய தலைமையில் இன்று கூட்டினார்.

    தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “இது ஒரு குடும்ப விழா, அதனால் தான் பூக்கள் கொடுத்தும், வளையல் கொடுத்தும் உங்களை வரவேற்றோம். தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அந்தவகையில், போதைப்பழக்கம் இல்லாத ஆண் பிள்ளைகளை கண்டறிந்து, நமது பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது சவாலாக மாறி வருகிறது.

    அதேபோல காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை இணைந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் குழந்தை மற்றும் பெண்களுக்கு உடனடியாக நீதியை பெற்றுத்தர வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிறகும், நீதிமன்றம் சென்று நீதியை பெறும் பெண்களை ‘வீராங்கனைகள்’ என கூற வேண்டும். ஏனென்றால், அவர்களது துணிச்சலே தவறிழைத்தோருக்கு தண்டனை கிடைக்க காரணமாக உள்ளது. ஆகையால், பெண்களுக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட வேண்டும்” என்றார்.

    கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அவர், “ஏன் அரைகுறையாக உடை உடுத்துகிறாய்? ஏன் இரவு நேரத்தில் நண்பருடன் சென்றாய்? தனியாக ஏன் செல்கிறாய்? என பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை நோக்கி கேள்வி கேட்பது என்பது ஒருவகையான மனநோய் போன்றது. அப்படி கேட்பவர்கள் அனைவரும் மனநோயாளிகள்” என்று ஆவேசமாக பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் கிடையாது – அண்ணாமலை விமர்சனம்!
    Next Article கழிவறையில் ரகசிய கேமரா.. செல்போனில் பெண்களின் வீடியோ.. வசமாக சிக்கிய டீ கடை மாஸ்டர்!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசுக்கு முதல்வர் என்றாலே ஸ்டாலின் தான் நியாபகம் வருகிறார் போல..! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

    July 31, 2026

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    July 31, 2026

    டெல்லி போராட்டம்: “சோனம் வாங்சுடன் கருத்து வேறுபாடா…?” – சிஜேபி மறுப்பு!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் 2026| டெகத்லானில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்!. சாதனை படைத்தார் தேஜஸ்வின் சங்கர்!

    காலையிலேயே குட்நியூஸ்!. சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!

    காமன்வெல்த் குத்துச்சண்டை!. இறுதிப்போட்டிக்கு முன்னேறி 10 பதக்கங்களை உறுதி செய்தது இந்தியா!

    காமன்வெல்த் 2026!. ஜூடோவில் வரலாற்றுச் சாதனை!. அஸ்மிதா தே மற்றும் ஹர்ஷ் சிங் தங்கம் வென்று அசத்தல்!

    காமன்வெல்த் 2026!. ஈட்டி எறிதலில் நீராஜ் சோப்ராவுக்கு வெள்ளி; யஷ்வீர் சிங்குக்கு வெண்கலம்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.