Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»வெறும் மூன்றரை மணி நேரத்தில் போட்டியை தலைகீழாக திருப்பிய ஆஸ்திரேலியா !!!
    விளையாட்டு

    வெறும் மூன்றரை மணி நேரத்தில் போட்டியை தலைகீழாக திருப்பிய ஆஸ்திரேலியா !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025Updated:November 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251122 205900
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட்டை பொறுத்தவரை ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஆஷஸ் தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அத்தொடர் நேற்று ஆஸ்திரேலியாவில் ஆரம்பமானது.

    ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று முதல் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் அந்த அணி சேர்த்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக்ஸ் அரை சதம் அடித்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினார்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 132 ரன்களுக்கு நடையை கட்டியது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென்ஸ் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினார்.

    40 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இன்று மதியம் 1:05 மணிக்கு 65 ரன்கள் ( 105 ரன்கள் முன்னிலை ) எடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இருந்தது. ஆனால் அடுத்த மூன்றரை மணி நேரத்தில் சரியாக 5:41 மணியளவில் ஆட்டமே முடிந்து விட்டது.

    20251122 205506

    ஆம் மதிய உணவிற்கு பின்னர் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு நடையை கட்டியது. 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி வெறும் 28.2 ஓவரில் அந்த இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 83 பந்துகளில் 16 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் என 123 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனை பட்டியலில் அவர் இரண்டாவது இடத்திற்கு சொந்தக்காரர் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    20251122 205611

    முதல் போட்டியின் முடிவில் ஆட்ட நாயகன் விருது ஆஸ்திரேலிய அணி வந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்குக்கு வழங்கப்பட்டது.

    20251122 211739

    1991 ஆம் ஆண்டு WACA-வில் கிரெய்க் மெக்டெர்மாட் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 11 விக்கெடுகளை கைப்பற்றி இருந்தார். அவருக்கு பின்னர் சுமார் 34 ஆண்டுகள் கழித்து ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையை மிட்செல் ஸ்டார்க் இன்று படைத்துள்ளார்.

    20251122 205636

    மொத்தமாக இதுவரை 74 ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று இருக்கிறது. அதில் ஆஸ்திரேலியா அணி அதிகபட்சமாக 34 முறையும் இங்கிலாந்து அணி 32 முறையும் தொடரை கைப்பற்றி உள்ளன. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 75வது தொடரில் ஆஸ்திரேலியா அணிய 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    Ashes Australia england Head Starc
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகழிவறையில் ரகசிய கேமரா.. செல்போனில் பெண்களின் வீடியோ.. வசமாக சிக்கிய டீ கடை மாஸ்டர்!
    Next Article நடைபயணத்தில் புகை, மதுபானம் அருந்துபவர்களுக்கு அனுமதி இல்லை.. வைகோ அதிரடி அறிவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026

    பிரெஞ்சு ஓபன் : 5மணி நேரம் 57 நிமிடங்கள் நடைபெற்ற போட்டி..! இறுதியில் வென்ற ஜூவான் மேனுவல்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.