திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குளத்து புதூர் நியாய விலை கடையில் 700 குடும்ப அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையான பொருட்கள் வினியோகம் செய்யப்படாமல் எப்பொழுது வந்தாலும் நாளை வருமாறு கூறிவிட்டு பொருட்கள் வழங்குவதில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் மேலும் மாதம் துவக்கத்திலிருந்து வந்தபோதும் கடைசி நாளான இன்றும் பொருட்கள் இல்லை என கூறுவதாகவும் கடையில் என்னை பருப்பு அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இருந்தாலும் அடுத்த மாதத்திற்கு என கூறிவிட்டு பொருட்கள் வழங்குவதில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் இது குறித்து கடையில் பணியாற்ற ஊழியர்கள் இடம் கேட்டபோது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற அடிப்படையில் ஏராளமானோர் அணுகுவதால் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பொருட்கள் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர் மேலும் கூடுதலாக வரும் பிற மாவட்ட மக்களுக்கான பொருட்களை தங்களுக்கு வழங்குவதில்லை எனவும் 700 அட்டைகளுக்கான பொருட்கள் மட்டுமே வருவதால் இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளிலும் இதே போன்ற நிலை மட்டுமே நிலவுவதாகவும் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றும் நிலையில் அந்தந்த ரேஷன் கடைகளில் தொடர்ந்து பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையை சேகரித்து அதற்குண்டான பொருட்களை வழங்கினால் மட்டுமே இதுபோன்று பொருட்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்படாது என பொதுமக்கள் தெரிவித்தனர்
Previous Articleகாவலாளி கொலைவழக்கு – மனிதஉரிமை ஆணையத்திற்கு கடிதம்
Next Article டாஸ்மாக் திறப்பதற்கு தடைகோரி மனு,..
