தமிழ்நாட்டில் 2.25 கோடி ரேசன் அட்டைகள் உள்ளது.
ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இதில் மூத்த குடிமக்கள் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பித்து தங்களின் சார்பில் வேறு ஒருவரை வைத்து ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.
தற்போது ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டம் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மாவத்திற்கு 10 நியாயவிலை கடைகள் என்ற அடிப்படையில் 100 நியாயவிலை கடைகளில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது,
இந்தத் திட்டத்தின் மூலமாக எவ்வளவு பேருக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு சாத்தியம் உள்ளது மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் உள்ள சாதக பாதக அம்சங்கள் என்ன ஆகியவை குறித்து இந்த ஐந்து நாட்களில் ஆய்வு செய்யப்பட்ட பிறகு திட்டத்தின் சாதக பாதக அம்சங்கள் ஆராயப்பட்டு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து முடிவு செய்யப்படும்.
