திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
டிட்வா புயலை கருத்தில் கொண்டு, அந்த 2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனக்கூறி, இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று மாலை 6.30 மணியளவில் அந்த எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றது. புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாகவும், ஆதலால் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு, ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு பதிலாக, கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
