தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடியும் முன்னரே மழை பெய்யத் தொடங்கியது. கேரளாவில் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால், தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று(25.06.2025) நீலகிரியில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேப் பொல கோவையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை(16.06.2025) தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 17 ஆம் தேதி நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version