தமிழ்நாடு அரசின் முக்கியப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களான ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களுக்கு முழுமையான தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்களின் கீழ் பயன்பெற, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இதுவரை இருந்தது. தற்போது இந்த நிபந்தனை திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களுக்கு முழுவதுமாகத் தளர்த்தப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது பாலினச் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.