பொங்கல் பரிசு அறிவிப்பை அரசு தற்போது வெளியிடாமல் இருப்பதால் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால் இந்தாண்டு பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, பொங்கலுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில் இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும்,அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது என கூறினார்.

மேலும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version