பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹5,000 வழங்கப்படும் என பாமக தேர்தல் வாக்குறுதியாக அன்புமணி அறிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாமகவின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்டார். அதில்,

வேலைவாய்ப்பு:  5 இலட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

2026-27, 2027-28 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் 2.5 இலட்சம் பேருக்கு அ வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட் நான்காம் தொகுதிப் பணிகளுக்கு 35,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இரண்டாம் தொகுதிப் பணிகளுக்கு 10,000 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும், காலியிடங்களை நிரப்ப ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். முதல்கட்டா 2025-26ஆம் ஆண்டில் 40,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

காவல்துறை, தீயவிப்புத்துறை, வனத்துறை உள்ளிட்ட சீருடைப் பணிகளுக்கு 20,000 தேர்வு செய்யப்படுவார்கள்.

போக்குவரத்துத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு 10,000 பேர் நியம செய்யப்படுவார்கள்.

மின்சார வாரியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பணியிடங்கள் காலி ட உள்ள நிலையில், முதல்கட்டமாக 16,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,000 மருத்துவர் 3,000 மருத்துவத்துறைப் பணியாளர்கள் என மொத்தம் 7,000 பேர் நியமிக்கப்படுவர்.

தமிழக அரசால் தொடங்கப்படவுள்ள 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளில் செய்வதற்காக ஒரு இலட்சம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் வாரியத்திற்கு 12,000 பேர் தேர்வு செய்யப்படுவார்

ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் துை காலமுறை ஊதியத்துடன் கூடிய வேலை உறுதி செய்யப்படும்.

பட்டப்படிப்பை முடித்து வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 வீதம் நிதி வழங்கப்படும்.

ஒரு கோடி பேருக்கு வேலை: தனியார் துறை, சுயவேலைவாய்ப்புகள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி டே வேலை வழங்கப்படும்

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதற்கான பணிகளை மேற்கொள்ளத் தனித் துறை உருவாக்கப்படும்.

(மது, கஞ்சா ஒழிப்பு)

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்படுவதைப் போல் போதைப் பொருளுக்கு எதிரான போர் (War Against Drugs) என்ற இயக்கம் தொடங்கப்படும்.

தமிழ்நாடு காவல்துறையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். அதன் தலைவராக டிஜிபி நிலை அதிகாரி பணியமர்த்தப்படுவார்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் வணிகத்தில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க 987 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படும்.

போதைப் பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10,000 பரிசு.

(நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை, இதில் குறைந்தபட்சம் ரூ.900 மாநில அரசின் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்படும்.

நெல் முதல் எள் வரை அனைத்து விளைபொருட்களுக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.

கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் கொள்முதல் செய்யவும், அவற்றைக் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யவும் வசதியாக வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் ஆணையம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் வேளாண்துறை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 6% வளர்ச்சி அடைவதை உறுதி செய்யத் திட்டங்கள் வகுக்கப்படும்.

இடுபொருள் மானியமாக ஓர் உழவருக்கு அதிகபட்சமாக ரூ.30,000 வரை வழங்கப்படும்.

நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பில் 25% வேளாண் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

பயிர்க் கடன் தள்ளுபடி

நியாயவிலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை விற்பனை செய்யப்படும். குடும்ப அட்டைக்கு மாதத்திற்கு 2 கிலோ நாட்டு சர்க்கரை வழங்கப்படும்.

12ஆம் வகுப்பு வரை அனைவருக்கு இலவசக் கல்வி

மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்.

ஒவ்வொரு மாணவருக்கும் ஓராண்டுக்குக் கல்வி வழங்குவதற்காக மட்டும் ரூ.50,000 51. செலவிடப்படும்.

பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 2026-27ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 7 ஆயிரம் கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

60,000 ஆசிரியர்கள் நியமனம்

5 ஆண்டுகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 60,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஓராசிரியர் பள்ளிகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் 5ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குறைந்தது 3 ஆசிரியர்களும், 8ஆம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகளில் குறைந்தது 6 ஆசிரியர்களும் இருப்பது உறுதி செய்யப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) வெற்றிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாது. அவர்கள் தகுதி காணும் நிபந்தனைகளின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்படுவார்கள்.

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 4 இலட்சம் ஆசிரியர்களின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எளிமையான முறையில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்கள் பொதுப் பிரிவினருக்கு 50%ஆகவும், அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் 40%ஆகவு குறைக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்று கணினி ஆசிரியர்களும், பிற சிறப்பு ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.

10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும்.

புத்தகப்பை இல்லாக் கல்வி முறையை செயல்படுத்துவதற்கு வசதியாக, 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசக் கைக் கணினி வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.

முதலமைச்சர் – அமைச்சர்களின் சொத்து விவரங்கள்

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்துப் பரிந்துரைக் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிர்வாகச் சீர்திருத்த ஆணையட அமைக்கப்படும்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவ மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு, மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

புதிய அரசு பதவியேற்று ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அமைச்சர்களின் செயல்பாடுக ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2ஆவது தலைநகராகத் திருச்சியும், 3ஆவது தலைநகரமா மதுரையும் அறிவிக்கப்படும்.

ஆண்டுக்கு நான்கு முறை சட்டப் பேரவை கூடுவதும், நூறு நாட்கள் கூட்டத் தொ நடப்பதும் உறுதி செய்யப்படும்.

சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

மாதம் ரூ.2000 மகளிர் உரிமைத் தொகை

ரூ.10-க்கு மக்கள் சாப்பாடு

ஏழை தொழிலாளர்களின் நலன் கருதி பத்து ரூபாய்க்கு சோறு, சாம்பார், ரசம், தயிர், கூட்டு பொரியல் ஊறுகாய், உடன் நிறைவான மதிய உணவு வழங்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.25 – க்கு அசைவ மதிய உணவு வழங்கப்படும்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version