தேர்தல் நெருங்கி வருவதால் அரசு, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 1 கோடி 31 லட்சம் பெண்களின் வங்கி கணக்கில் நேற்று காலையில் 5000 பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகை 3000 ரூபாய் முன்பணமாகவும், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் அடுத்து அமைய இருக்கும் திமுக ஆட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்பை பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் அதிர்ந்து போயினர்.

 

குறுக்கு வழியில் நலத்திட்டங்களை முடக்க பாஜ போட்ட சதியை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த அறிவிப்பின் மூலம் பெண்கள் நலனின் மீது திராவிட மாடல் அரசிற்கு இருக்கும் அக்கறையை மீண்டும் நிரூபித்து விட்டார் என திமுகவினரும், பொதுமக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல்வரின் இந்த அதிரடி செயலுக்கு கூட்டணி கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்பை பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் அதிர்ந்து போயினர். வாழ்த்து தெரிவிக்க வார்த்தைகள் தெரியாமல் திகைத்து போயினர்.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பல பகுதிகளில்  5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதற்கு  மக்கள் தங்களது வீட்டு வாசல்களில் கோலமிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதேபோல், சென்னையின் பல்வேறு இடங்களில் ”நீங்கள் 1000 ரூபாயை தடுக்க முயற்சித்தால், நான் என் மக்களுக்கு ரூ.5000 தருவேன்” என்ற வாக்கியம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version