சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 92.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1933-ஆம் ஆண்டு பிறந்த தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன். மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் தடம் பதித்த இவரின் கவிதைத் தொகுப்பான ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
வயது மூப்பு காரணமாக அண்மையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார்.
ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு தலைவர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
