கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரும்,  செய்தி வாசிப்பாளருமான ஈரோடு தமிழன்பன்  இன்று காலமானார் என்ற செய்தியறிந்து  மிகுந்த வருத்தமடைந்தேன்.

தமிழ் மொழி, இனம் மீது மிகுந்த பற்று கொண்டவராக கவிஞர் ஈரோடு தமிழன்பன் பன்முகத் திறமை கொண்டவர். நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர், படைப்பாளி, கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர் என அனைத்துத் துறைகளிலும்  முத்திரை பதித்தவர்.  வாழும் வரை தமிழுக்காக உழைத்தவர்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்  அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version